வரும் 28ஆம் தேதி தி.மு.க.வின் புதிய தலைவர், பொருளாளர் தேர்வு

திமுகவின் புதிய தலைவரையும், பொருளாளரையும் தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் (ஆகஸ்டு) 28ஆம் தேதி நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்டு 28ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தணிக்கைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதோடு, தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலினும், புதிய பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0a1a