திமுக, அதிமுக – வேறென்ன ‘பீப்’ வித்தியாசம்?

அடிக்கடி பாராட்டு விழா நடந்தா திமுக ஆட்சி. அடிக்கடி பதவியேற்பு விழா நடந்தா அதிமுக ஆட்சி.

முதலைமைச்சரே ஜெயிலுக்கு போனா அதிமுக ஆட்சி. முதலமைச்சர் குடும்பத்தில இருந்து ஜெயிலுக்கு போனா திமுக ஆட்சி.

“எனக்கு யாரு இருக்கா?” என்றால் ஜெயலலிதா. ”எனக்கு இதுதான் கடைசி தேர்தல்” என்றால் கருணாநிதி.

நாட்டில் நடக்கிற கொலை, கொள்ளை, சாதி வெறியாட்டம், ஊழல், லஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு – இவற்றை கலைஞர் டிவியும் சன் டிவியும் விமர்சித்தால் அது அதிமுக ஆட்சி. இவற்றையே ஜெயா டிவி விமர்சித்தால் அது திமுக ஆட்சி.

மேடையில் பேசியதற்கு அவதூறு வழக்கு தொடுத்தால் அதிமுக ஆட்சி. தேசிய பாதுகாப்பு சட்டம் தொடுத்தால் திமுக ஆட்சி.

சாதிவெறி, மதவெறி பிடித்த பார்ப்பன கும்பலை தன் அருகில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தினால் அதிமுக ஆட்சி. சாதிவெறி பிடித்த சாதி இந்துக்களின் ஆலோசனையின் பேரில் ஆட்சி நடத்தினால் அது திமுக ஆட்சி.

மதவெறி சாதிவெறி பாசிசம் அதிமுக ஆட்சி. சாதிவெறி பாசிசம் திமுக ஆட்சி .

சாதிவெறி, மதவெறிக்கு ஆதரவான ஆட்சி என்றால் அதிமுக ஆட்சி. சாதிவெறிக்கு ஆதரவான ஆட்சி என்றால் திமுக ஆட்சி.

திருடன் ஆண்டால் திமுக ஆட்சி. திருடி ஆண்டால் அதிமுக ஆட்சி.

கொடநாட்டில் கோப்பு பார்த்தால் அதிமுக ஆட்சி. கோபாலபுரத்தில் கோப்பு பார்த்தால் திமுக ஆட்சி.

கணவன் இல்லாத அதிகாரம் அதிமுக ஆட்சி. மனைவி, துணைவி. இணைவி, கனைவி, புனைவி அதிகார பகிர்வு என்றால் திமுக ஆட்சி.

தனிநபர் சர்வாதிகாரம் அதிமுக ஆட்சி. தன் குடும்ப சர்வாதிகாரம் திமுக ஆட்சி.

வேறென்ன மயிரு வித்தியாசம்?

– சே குவேரா