கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் இயற்கை எய்தினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன்(92) இன்று இரவு (சனிக்கிழமை) டெல்லியில் காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளராகவும், ஏஐடியூசி தலைவராகவும் இருந்தவர் ஏ.பி.பரதன்.

டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்த ஏ.பி.பரதனுக்கு கடந்த டிசம்பர் 7-ம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூத்த மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக ஏ.பி.பரதன் இன்று (சனிக்கிழமை) காலமானார்.

பரதனின் மனைவி, நாக்பூர் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். இவர் கடந்த 1986-ம் ஆண்டு காலமானார். இத்தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.