Wednesday, January 14, 2026
heronewsonline.com

heronewsonline.com

  • Home
  • News
  • CineNews
  • Views
  • Reviews
  • Gallery
  • Videos
  • In English
News Slider 

விவாகரத்து கோரி அமலாபால் – விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

August 6, 2016August 7, 2016 admin actress, amalapaul, breakingnews, Director, divorce, exclusivenews, family court, in, petition, submitted, vijay

இயக்குநர் விஜய் – நடிகை அமலாபால் இருவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மத்த்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சமீபநாட்களாக செய்திகள் வெளியாகின.

திருமணத்துக்குப் பிறகு அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவதால், இது விஷயமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை மறுத்த விஜய், “நானும் அமலாபாலும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மை தான். ஆனால், திருமணத்துக்குப் பிறகு அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே” என்று அறிக்கை வெளியிட்டார். மேலும், “நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால், அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது” என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆக, நம்பிக்கை துரோகமும், நேர்மையின்மையும் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்பது இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில், விஜய்யும், அமலாபாலும் இன்று சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். நீதிபதி தீபிகா முன்னிலையில் இருவரும் விவகாரத்து செய்யப் போவதற்கான விருப்ப மனுவை நேரில் அளித்தனர். இவர்களது மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் விஜய் -அமலாபால் விவகாரத்து கோரி நீதிமன்றம் சென்றிருப்பது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ← “வியட்நாம் வீடு’ திரைப்படம் மூலம் சுந்தரம் எப்போதும் நினைவு கூரப்படுவார்!”
  • “சினிமாவில் தைரியமாக அரசியல் பேசணும்!” – ‘ஜோக்கர்’ இயக்குனர் →

You May Also Like

எஸ்விஆர் பற்றிய ஆவணப்படம்: தடையை மீறி வெளியிடப்பட்டது!

June 6, 2016

”கமல்ஹாசனின் ‘குணா’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம்”: இடைக்காலத் தடையை நீக்கியது சென்னை உயர் நீதிமன்றம்!

September 7, 2024

நெடுவாசல் பிரச்சனை: “என் கிராம மக்களுக்கு துணை நிற்பேன்!” – ‘டிடி’

February 28, 2017

Latest Updates

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ல் வெளியாகும் ‘வா வாத்தியார்’ திரைப்பட முன்வெளியீட்டு  விழா!
CineNews 

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ல் வெளியாகும் ‘வா வாத்தியார்’ திரைப்பட முன்வெளியீட்டு விழா!

January 13, 2026 admin
நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா!
CineNews 

நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

January 12, 2026 admin
பராசக்தி – விமர்சனம்
CineNews Reviews 

பராசக்தி – விமர்சனம்

January 11, 2026 admin
தமிழ் மெயின்ஸ்ட்ரீம் சினிமாஉலகில் நிகழ்ந்திருக்கும் எட்டாவது அதிசயம் ’பராசக்தி’!
Slider Views 

தமிழ் மெயின்ஸ்ட்ரீம் சினிமாஉலகில் நிகழ்ந்திருக்கும் எட்டாவது அதிசயம் ’பராசக்தி’!

January 11, 2026 admin
“வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி’!” – நாயகன் சிவகார்த்திகேயன்
CineNews 

“வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி’!” – நாயகன் சிவகார்த்திகேயன்

January 9, 2026 admin
‘ஜனநாயகன்’ தணிக்கை சான்று வழக்கு: ஜனவரி 21-க்கு ஒத்திவைப்பு!
News Slider 

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்று வழக்கு: ஜனவரி 21-க்கு ஒத்திவைப்பு!

January 9, 2026 admin
‘பராசக்தி’-க்கு U/A சான்றிதழ்; அறிவித்த தேதியில் ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு!
News Slider 

‘பராசக்தி’-க்கு U/A சான்றிதழ்; அறிவித்த தேதியில் ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு!

January 9, 2026 admin
அன்றைய ‘பராசக்தி’யும், மதுரை தங்கம் தியேட்டரும்!
Slider Views 

அன்றைய ‘பராசக்தி’யும், மதுரை தங்கம் தியேட்டரும்!

January 6, 2026 admin
“மாணவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை ‘பராசக்தி’ திரைப்படம் அழுத்தமாக காட்டுகிறது!” – நாயகன் சிவகார்த்திகேயன்
CineNews 

“மாணவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை ‘பராசக்தி’ திரைப்படம் அழுத்தமாக காட்டுகிறது!” – நாயகன் சிவகார்த்திகேயன்

January 5, 2026 admin
2.22 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.3000 ரொக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
News Slider 

2.22 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.3000 ரொக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

January 5, 2026 admin
எப்படி இருக்கிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்பட டிரைலர்?
CineNews 

எப்படி இருக்கிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்பட டிரைலர்?

January 4, 2026 admin
தீயாய் பரவும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்பட டிரைலர்!
CineNews Reviews 

தீயாய் பரவும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்பட டிரைலர்!

January 4, 2026 admin
மார்க் – விமர்சனம்
CineNews Reviews 

மார்க் – விமர்சனம்

January 4, 2026 admin
அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை ஏற்று ’உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ அறிவிப்பு!
News Slider 

அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை ஏற்று ’உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ அறிவிப்பு!

January 4, 2026 admin
டியர் ரதி – விமர்சனம்
CineNews Reviews 

டியர் ரதி – விமர்சனம்

January 3, 2026 admin
Copyright © 2026 heronewsonline.com. All rights reserved.