குற்றவாளி ஜெயலலிதா சமாதியில் தீபா தியான காமெடி!

சொத்துக் குவிப்பு குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட, செத்துப்போனதால் சிறை தண்டனையில் இருந்து தப்பிய ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு, அருவருக்கத்தக்க வகையில் பேராசை பிடித்து அலையும் ஜெ. அண்ணன் மகள் தீபா திடீரென வந்தார்.

அங்கு ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற கேவலமான பெயர் கொண்ட அமைப்பின் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை வைத்து, ஓ.பி.எஸ். பாணியில் திடீரென தியானத்தில் ஈடுபட்டார். அவருடன் அவருடைய கணவர் மாதவன், தோழி ஆகியோரும் தியானத்தில் ஈடுபட்டது ரொம்ப காமெடியாக இருந்தது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தீபா, “நான் ஆர்.கே. நகரில் போட்டியிடப் போவதாக அறிவித்ததில் இருந்து என்னை கூலிப்படை மூலம் மிரட்டுகின்றனர். யாரும் எனக்கு நேரடியாக எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தவில்லை; என்றாலும் மறைமுகமாகவே தொல்லை கொடுத்து வருகின்றனர்” என்றார்.