ஆர்.கே.நகர் தேமுதிக வேட்பாளர்: விஜயகாந்த் அறிவித்தார்!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளராக மதிவாணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

0aஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிடுவதென முடிவு செய்து, வேட்பாளராக ப.மதிவாணன், வடசென்னை மாவட்ட கழக செயலாளர் போட்டியிடுவார் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவருக்கு மாவட்ட, பகுதி, வட்ட, கிளை கழகம், மற்றும் சார்பு அணி, தேமுதிக தொண்டர்களும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு கழக வேட்பாளருக்கு பொதுமக்களின் பேராதரவை திரட்டி வெற்றி பெற செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.