“ஐரோம் ஷர்மிளாவின் முற்போக்கு தேர்தல் முறைக்கு மணிப்பூர் தயாராக இல்லை!”

அவர் உண்ணாவிரதம் இருந்தவரை மிக புகழ்பெற்று இருந்தார். ஆனால் ஆயுதப்படை சட்டத்தை வாபஸ் வாங்கவில்லையெனில் உண்ணாவிரதம் இருந்து இறப்பேன் என 16 ஆண்டுகளாக சொல்லி வந்தவர், ஓவர்நைட்டில் கட்சி துவங்கி அரசியலில் குதித்தது மக்களுக்கு மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதிலும் அவர் கோவாவை சேர்ந்த் பிரிட்டிஷ் குடிமகனை கல்யாணம் செய்துகொண்டார். கிராமப்புற பகுதிகள் நிரம்பிய மணிப்பூரில் இது ஒப்புக்கொள்ளபடவில்லை.

அவரது கட்சியில் பல என்.ஆர்.ஐ-கள் போட்டியிட்டனர். ஷர்மிளா கட்சி என்பதால் ஹார்வர்டில் படித்து அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்த ஒருவரும் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு, கட்சியில் சேர்ந்து, போட்டியிட்டார். உள்ளூர் அரசியல் தெரியாமல் அவரால் 500 ஓட்டு மட்டுமே வாங்க முடிந்தது.

ஷர்மிளா பாதுகாப்பான தொகுதியில் போட்டியிடாமல் முதல்வரின் கோட்டை என சொல்லப்படும் தொகுதியில் போட்டியிட்டார். கட்சி சார்பில் பணமே செலவு செய்யப்படவில்லை. சைக்கிளில் ஏறி தொகுதியைச் சுற்றி வந்து ஓட்டு கேட்டார். அவரிடம் பலரும் “ஏன் உண்ணாவிரதத்தை கைவிட்டாய் என்றே சண்டைக்கு வந்தார்கள்” என சொல்கிறார்.

ஜாதி அரசியலை வெறுத்க்த ஷர்மிளா, ஜாதி பார்த்தும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மணிப்பூர் வரலாற்றில் முதல்முறையாக முஸ்லிம் பெண் வேட்பாளரை இவர் கட்சி தான் நிறுத்தியது என்றால் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் மக்கள் ஜாதி பார்த்து தான் வாக்களித்தார்கள்.

உள்ளூர் அரசியல் தெரியாதது
பணம் செலவு செய்யாதது
ஜாதி பார்க்காமல் இருந்தது
உள்ளூர் நிலவரம் தெரியாத படித்த வெளிநாட்டு வேட்பாளர்களை நிறுத்தியது

இப்படி பல காரணங்களால் அவரது கட்சியும் அவரும் படுதோல்வி அடைந்தார்கள். அவர் நடத்தியது மிக முற்போக்கான ஒரு தேர்தல் முறை. மணிப்பூர் அதற்கு தயாராக இல்லை.

NEANDER SELVAN