‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு நடப்பது வணிக வன்கொடுமை!

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு நடப்பது வணிக வன்கொடுமை.

ஏதாவது படத்துக்கு போலாம்னு டிக்கெட் தேடுனா திரும்பிய பக்கமெல்லாம் வணிக பெரும்படங்கள் முகம் காட்டுகின்றன.

ஆனால், ‘பரியேறும் பெருமாள்’ தான் போக வேண்டும் என்று டிக்கெட் தேடினால், பல கிலோமீட்டர் தூரத்தில், மதியமோ அல்லது இரவுக் காட்சியோ மட்டும்தான் கிடைக்கிறது.

மக்களுக்காக உருவாகும் சினிமாக்களை மக்களிடமிருந்தே தள்ளி வைப்பவர்கள் யார்? ‘மேற்கு தொடர்ச்சி மலை’க்கும் இதே தான் நடந்தது.

இந்த நிலை முதலில் உடையட்டும். சினிமாவின் சீர்திருத்தம் இதிலிருந்து தொடங்கட்டும். பரியன் உடைக்க வேண்டிய வெளிகள் படத்திற்கு வெளியேயும் இருக்கின்றன. உடைப்பான் என நம்புகிறேன். காத்திருக்கிறேன்.

Jeyachandra Hashmi

 

Read previous post:
p2
பரியேறும் பெருமாள் – விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி

Close