நீங்கள் ‘பரியேறும் பெருமாள்’ பார்க்க வேண்டும் – ஏன்?

ஒருவரை காதலித்துவிட்டு அவருடன் சேர முடியாமல் தடையாக நிற்கும் ஒரு சமூகச்சுவர் சட்டென தட்டுப்பட்டு, விலகி இருப்பதே நல்லது என நினைத்திருப்பீர்கள் இல்லையா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

காதலின் வழி சமூகம் உங்களை வந்தடையும்போது என்ன செய்வதென தெரியாமல் நிற்பீர்கள் இல்லையா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

காதல் ஏன் காதல் மட்டுமாக இங்கு இருப்பதில்லை என யோசிக்கிறீர்கள் இல்லையா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

இவ்வளவு கொண்டாடப்படும் சினிமாவுக்கு போதிய திரையரங்குகள் ஏன் ஒதுக்கப்படவில்லை என குழம்புகிறீர்கள் இல்லையா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

கலை எப்படி சமூகநீதி பேசுமென கேள்வி கேட்க தோன்றுகிறதா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

உங்களின் காதலை ரத்தமும் சதையுமாக ஆக்கும் இச்சமூகம் புரிய வேண்டுமா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

காதலில் அரசியல் எப்படி இருக்க முடியும் என யோசிக்கிறீர்களா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

காதலின் வழி உங்களை இழந்திடாமல், உங்களை நீங்கள் கண்டடையும் வழி தெரிய வேண்டுமா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

உங்கள் காதல், இரு இதயங்கள் சார்ந்த சமாசாரம் மட்டுமல்ல என புரிந்துகொள்ள வேண்டுமா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

கோணலான இச்சமூகத்தை நேராக்கும் வலிமை கொண்ட ஒரே ஆயுதம் காதல்தான் என அறிந்துகொள்ள வேண்டுமா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

நீங்கள் காதலில் ஏன் தோற்கிறீர்கள் என தெரிய வேண்டுமா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

காதலில் எப்படி ஜெயிப்பது என யோசிக்கிறீர்களா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

உங்களை திரையில் வடித்தால் எப்படி இருக்குமென அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

பரியேறும் பெருமாள் பாருங்கள்.

Rajasangeethan John

 

Read previous post:
p3
‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு நடப்பது வணிக வன்கொடுமை!

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு நடப்பது வணிக வன்கொடுமை. ஏதாவது படத்துக்கு போலாம்னு டிக்கெட் தேடுனா திரும்பிய பக்கமெல்லாம் வணிக பெரும்படங்கள் முகம் காட்டுகின்றன. ஆனால், ‘பரியேறும் பெருமாள்’

Close