நட்டியின் ‘போங்கு’ இசை வெளியீட்டு விழா!

‘சதுரங்க வேட்டை’ வெற்றிப்படத்தின் நாயகன் நட்ராஜ் சுப்ரமணியன்  ( நட்டி), கதாநாயகனாக நடிக்கும் படம் ‘போங்கு’. கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசுப்பட்டி ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா,  ராஜன், மனிஷா, பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘போங்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் பார்த்திபன், லிங்குசாமி, விஜய் மில்டன், நடிகர் சிபிராஜ் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

0a1m

படம் பற்றி இயக்குனர் தாஜ் கூறுகையில், “எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாவது இல்லை. எல்லா குற்றங்களும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப நவீனமாக்கப்பட்டு குற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

குற்றங்களுக்கான  ஆணிவேர் எது, யார்,  என்று பார்த்தால், வெளியிலிருக்கும் யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். உள்ளேயே இருந்துகொண்டு, வெளியாட்களைக் கொண்டு அந்த குற்றத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.

அப்படித்தான் ரோல்ஸ் ராய்ஸ் காரின் திருட்டும். யார், யாரால், எப்படி திருடப்படுகிறது என்பது பரபரப்பான திரைக்கதையாக இருக்கும். காஸ்ட்லியான கார் பற்றிய கதையை காஸ்ட்லியாக செலவு செய்து படமாக்கி இருக்கிறோம். ஒரு புதிய இயக்குனருக்கு இவ்வளவு செலவு செய்து படமாக்க ஒத்துக்கொண்ட தயாரிப்பாளர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்” என்றார் இயக்குனர் தாஜ்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி

இசை – ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள் – கபிலன், தாமரை, மதன்கார்க்கி

எடிட்டிங் – கோபிகிருஷ்ணா

 கலை – ராஜமோகன்

ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தர்

நடனம் – கல்யாண் , பாபி

தயாரிப்பு  மேற்பார்வை – ஏ.பி.ரவி

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி