பிக்பாஸ் படிப்பினை: நாம் எல்லாருமே நீச்சல் குளங்கள் கிடைக்காத ஓவியாக்கள் தான்..!

பிக்பாஸ்: 04.08.2017

She is seriously ill.

நான் எப்போதும் சொல்வதுதான். நாம் வாழும் சமூகம் மேலும் மேலும் பிளக்கப்பட்டு மனச்சிதைவு சமூகமாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. Capitalistic mode of production, consumerism, Gadgets Affinity என பலவற்றை காரணமாக சொல்லலாம்.

ஆகவே நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல உணர்வுகளையும் மூளைகளையும் எதிர்கொண்டு வாழ்வதற்கும் சரி-தவறுகள் புரிந்துகொள்வதற்கும் பயிற்சி கிட்டாத சமூகமாக நாம் மாறி இருக்கிறோம் என்ற உண்மையின் விளைவுதான் ஓவியா. அடுத்தவரை எதிர்கொள்வது என்பது போய் தன்னை தானே எதிர்கொள்ள முடியாத நியோலிபரல் வாழ்க்கையில்தான் நாம் நீந்தி கொண்டிருக்கிறோம்.

எனக்கு தெரிந்த ஒரு தம்பதி, மகளை மிக செல்லமாக வளர்ப்பார்கள். அந்த குழந்தை எதை கேட்டு அடம்பிடித்தாலும் வாங்கி கொடுத்து விடுவார்கள். அந்த வளர்ப்பு முறையை கண்டித்து அவர்களிடம்,

‘வாழ்க்கை பல தோல்விகளையும் சில வெற்றிகளை மட்டுமே கொண்டது. கேட்கும் அனைத்துமே கிடைக்கும் வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திவிட்டால் சின்ன தோல்வியை கூட தாங்க மாட்டாமல் நொறுங்கி விடுவாள் குழந்தை’ என்றேன்.

அப்படியொரு குழந்தைதான் ஓவியா.

மனித பரிணாமமே குழு வாழ்க்கையால்தான் நிகழ்ந்தது. சமூக வாழ்க்கையை புறக்கணித்து தனித்துவம் பேசும் நியோலிபரலிஸம் தற்கொலைக்குதான் இட்டு செல்லும்.

ஓவியா பாறைகள் கொஞ்சம் ரசிக மனப்பான்மையை நிறுத்தி, சமூக சிந்தனையோடு இந்த சிக்கலை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், நாம் எல்லாருமே நீச்சல் குளங்கள் கிடைக்காத ஓவியாக்கள் தான்!

RAJASANGEETHAN JOHN