ஓவியாவிடம் நாம் ரசித்த திடமும் வளைந்து கொடுக்காத தன்மையும் இந்த வாரம் மிஸ்ஸிங்!

அழவே அழாதவர் ஒருமுறை அழும்போதுதான் பாவமாய் இருக்கும். நெதமும் அழுதால், “போடி பீத்தச் சிறுக்கி”ன்னு தான் சொல்லத் தோணும்.. திஸ் ஓவியா.. உஸ்ஸ்ஸ்ஸ்..

ஓவியாவை ரசிக்க வைத்ததே அவளின் திடமும், எதற்கும் வளைந்து கொடுக்காத தன்மையும்தான்.. அதெதுவும் இந்த வாரம் அவளிடம் காணவில்லை..

இப்போதவள் நம் மனதில் பதிந்த ஒரு காட்சி பொம்மை…

இது இப்படியே நீடித்தால் கூடிய விரைவில் ஓவியாவை ‘லூசுமுண்ட’ என்று நாமே திட்டும் நிலை வரும்..

கூடப் பழகுனதுகளே கால வாரிவிட்டுட்டு போவுது; ஓவியால்லாம் எம்மாத்திரம்…

ரைட்டு விடு.

# # #

பிக்பாஸ் அடிக்சன் குறைய ஆரம்பித்துவிட்டது. மகிழ்ச்சி…

எல்லாரும் அவரவர்களாகவே இருந்தபோது இருந்த சுவாரஸ்யம் இப்போது இல்லை..

பிக்பாசே டாஸ்க் கொடுத்து சுவாரஸ்யம் கூட்ட நினைத்தாலும் அசுவாரஸ்யமாகவே இருக்கிறது..

சும்மாவா சொன்னார் ரஜினி… ”நண்பா, எல்லாம் கொஞ்ச காலம் தான்.” டாட்

MEENAMMA KAYAL