ஓவியாவிடம் ஒரு தொலைபேசி உரையாடல் வாங்கக்கூட துப்பில்லாத பிக்பாஸ்!

பிக்பாஸ்: 27.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்…

# # # # #

SARAVANAKARTHIKEYAN CHINNADURAI:

ரைஸா லேசாய் முட்டாள், லேசாய் சுயநலமி, நிறைய ‘எடுப்பார் கைப்பிள்ளை’ குணம் என்பவை தவிர பெரும் மோசம் ஒன்றில்லை தான். முக்கியமாய் அவரும் தன் ஒரிஜினாலிட்டியோடே பெரும்பாலும் அங்கு இருந்தார்.

அவருக்கான குறும்படம் பார்க்கையில் ஒரு நல்ல அழகியை இழந்து விட்டோம் என்பது புரிகிறது (ஸ்விம்மிங் பூலில் இறங்கி ஏறி, இறங்கி ஏறிய க்ளிப்பிங் எங்கே மங்குனி எடிட்டர்களா!) .

ஆனால், வேறு வழியில்லை. இந்த ஆட்ட விதியே, இருப்பதில் மோசத்தை நீக்குவது தான். அப்படித்தான் சிக்கிக் கொண்டார். சேராத இடம் சேர்ந்து… என்று தான் பாட வேண்டும்.

ஆனால் இன்று வெளியே வந்தபின், பிக்பாஸ் வீட்டில் கற்றதாய் பொருட்களை வீணாக்குவது பற்றி அவர் சொன்னது தான், இது வரையிலான அக்கேள்விக்கு வந்த பதில்களிலேயே அசலானதும் ஆத்மார்த்தமானதும் உருப்படியானதும் என்று எண்ணுகிறேன்.

குட்பை மிஸ் ரைஸா வில்சன்!

* * * * *

JAYASHREE GOVINDARAJAN:

ரைஸா இருக்கும்வரை கடுப்படித்துக் கொண்டிருந்தாலும், வெளியேற்றம் மிக நாகரிகமாகவும், கம்பீரமாகவும் இருந்தது.

ஆல் தி பெஸ்ட் ரைஸா…

*

ரைஸா எவிக்ட் ஆகி வீட்டைவிட்டே கிளம்பும்போதுகூட “என்னை ப்ராங்க் பண்ணி்னதுக்காக இப்பவாவது ஃபீல் பண்றீங்களா?’” என்று சுஜா கேட்பது. அறைய வேண்டிய கேள்வி. வளரப் போவதே இல்லை.

இது மாதிரி சண்டைக்குக் கிளம்பும் நேரங்களிலும், போட்டி போடும்போதும், தன்னையறியாமல் வெளிவந்துவிடுகிற ஒரிஜினல் சுஜாவைப் பார்க்க முடியும். அந்த வேறுவிதமான பேச்சையும் கேட்க முடியும்.

மற்ற நேரமெல்லாம் நடிப்பு… சகிக்க முடியாத நடிப்பு மட்டும்தான்…!

*

வீட்டிற்குள் நாளை புது (பழைய) வரவு ஆர்த்தி, ஜூலி என்று நினைக்கிறேன்.

இவர்களை வீட்டிற்கு அனுப்பப்பட்ட பாட்டில் திரும்ப முதலிலிருந்து…

திரும்ப ஜூலி எல்லோரையும் அண்ணா, அக்கா என்று கட்டிப் பிடித்து, கத்தி, சீன் போட்டு, மசாஜ் செய்து… ஸ்ஸ்சப்பா…

ஜூலி இப்பொழுது புதிதாக ஓவியாவிற்காக உருகுவது எல்லாம் சகிக்கவே முடியாத செயற்கையாக இருக்கிறது.

ஏழரை ஒருவருக்கு ஆயுளில் 3 தடவை வரும் என்பது சரிதான். விதி வலிது.

*
”நான் வந்தால் இருவரை ட்ரிக்கர் செய்வேன்” என்று சக்தி சொல்வது சிநேகன், வையாபுரியைத் தான் இருக்கும்.

சக்தி வராமல் இருக்க வேண்டும்.

சிநேகன், ஆரவ் மட்டுமே உருப்படியான போட்டியாளர்கள்.

*

பரணி, “கொஞ்சம் தாமதமாக உள்ளே வருகிறேன்” என்கிறார்.

ஆர்த்தியும், ஜூலியும் அடுத்த நொடியே உள்ளே வரத் தயார். ஆனால், வெளியே எல்லாவற்றையும் படித்துவிட்டு இனி முந்தைய தவறுகளை மறைக்க இன்னும் ஃபேக்காக இருவரும் நடிக்கத் தொடங்குவார்கள் (ஓவியா பெயரைக் கேட்டதும் ஜூலி விசிலடித்தது மாதிரி…)

ஆர்த்தியும் ஜூலிக்கு சற்றும் குறையாத ஃபேக்கே. மழுப்பலான, திறமையான ஃபேக் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சக்தி மிக மோசமான திட்டத்துடன் உள்ளே வரத் தயாராக இருக்கிறார். “ட்ரிக்கர் செய்ய வருகிறேன்” என்று சக்தி சொல்லியும், தான் உள்ளே வரவே தயாரில்லை என்று காயத்ரி அலறும் அளவுக்குப் போனது வெளியே ட்விட்டரில் மக்கள் வெச்சு செய்வதின் ஆய பயன்.

இவர்களில் யார் உள்ளே வந்தாலும் அவர்களே முதலில் வெளியேற்றப்பட வேண்டியவர்கள். உள்ளேயும் இருந்துவிட்டு, வெளியேயும் படித்துவிட்டு, திரும்ப உள்ளே வந்து வேறு மாதிரி தன்னை நிரூபிக்க அனுமதிப்பதே தவறு.

ஸ்ரீ, பரணி என்று மக்களால் வெளியேற்றப்படாதவர்கள் தவிர இவர்களில் யார் உள்ளே வந்தாலும் என் (வாரத்திற்கு 1750) ஓட்டில் ஒன்றுகூட இவர்களுக்குக் கிடையாது.

* * * * *

SARAVANAKARTHIKEYAN CHINNADURAI:

“ஜூலி, காயத்ரி மீது காட்டும் கோபத்தை நீங்கள் ஏன் அரசியல்வாதிகள் மீது காட்டவில்லை?” – கமல்.

ஜூலி மீது காட்டிய கோபத்தை ஏன் காயத்ரி மீது கமல் காட்டவில்லை?

கிட்டத்தட்ட அதே காரணம் தான்!

* * * * *

MICHAEL ARUN:

யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு கிடைச்சு தப்பு பண்ணவங்கள உட்கார வச்சு, மக்களை தப்பு சொல்றது எந்த வகையிலும் நியாயம் இல்ல கமல் சார்…

இதே விஷயத்தை நாங்க அரசியலிலும் கடைப்பிடிக்கிறோம்… ஏதோ தப்பு பண்ணிட்டாங்க… மன்னிக்கிறோம்ன்னு…. நமக்குள் ஒருத்தர் தானே-ன்னு… !!

நீங்கள் இன்று பண்ணியதும் அதே அரசியலே!!! தேவையில்லாத எபிசோட்…

*

ஓவியாவிடம் ஒரு தொலைபேசி உரையாடல் வாங்கக் கூட முடியாமல், அவர் தன் மீது அன்பு கொண்டவர்களுக்கு வேறு ஊடக வாயிலாக பேசியதை எடிட் செய்து போட்டதில் இருந்தே தெரிகிறது… இந்த நிகழ்ச்சியின் லட்சணம்…!

# # # # #