அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’: பர்ஸ்ட் லுக் வெளியீடு!

0a1c‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் – இயக்குனர் அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் புதிய படத்துக்கு ‘பிகில்’ என பெயரிடப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக இன்று (21-06-2019) அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்பட்த்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார். அவருடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

Read previous post:
0a1a
பக்கிரி – விமர்சனம்

குற்றம் செய்துவிட்டு போலீசில் சிக்கிக்கொண்ட மூன்று இளைஞர்களை சந்திக்கிறார் தனுஷ். அவர்களை நல்வழிப் படுத்துவதற்காக தன் வாழ்க்கை கதையை கூறுகிறார். சிறுவயதில் இருக்கும் போது சிறுசிறு திருட்டுகள்

Close