கமல்ஹாசன் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கீடு!

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

இது குறித்து கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம், மிகப் பொருத்தமானது. தமிழகத்தில் புதிய சகாப்தத்திற்கும் இந்திய அரசியலுக்கும் புதிய ஒளி பாய்ச்சுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

”ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்” என்றார் கமல். ஆனால் அவரது கட்சியுடன் கூட்டணி சேர எந்த கட்சியும் முன்வரவில்லை. எனவே, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அவரது கட்சி ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தில் தனித்து போட்டியிடும் என தெரிகிறது.

Read previous post:
0a1a
பூமராங் – விமர்சனம்

வனநடை மேற்கொள்ளச் சென்ற சிவா என்ற இளைஞர் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டுவிடுகிறார். தீயினால் ஏற்பட்ட வடு அவரது முகத் தோற்றத்தை குலைத்துவிடுகிறது. இச்சமயத்தில் மூளைச் சாவு

Close