“பொறுமையின் எல்லைக்கு எங்களை வேகமாக விரட்டுங்கள்; இன்னும் வேகமாக…!”

மீனவனை கொன்றதை வரவேற்கிறோம். இன்னும் நிறைய மீனவர்கள் கொல்லப்பட வேண்டும். இன்னும் நிறைய இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுங்கள். மீத்தேன் எடுங்கள்.

பால், பெட்ரோல் என இன்னும் பலவற்றுக்கு விலை ஏற்றுங்கள். எங்கள் பணத்தை எடுக்க இன்னும் கட்டணங்கள் விதியுங்கள். வரவேற்கிறோம்.

நீட் போன்று, உதயா போன்று இன்னும் பல திட்டங்கள் எங்களுக்கு வேண்டும். அணு உலைகளையும் அதிகம் கொணருங்கள். அணுக்கழிவும் எங்களுக்குத்தான் வேண்டும்.

எங்கள் விவசாயிகள் எவருக்கும் நிவாரணம் வழங்காதீர்கள். தாமிரபரணி எங்களுக்கு தேவையில்லாத விஷயம். அதுபோல் மிஞ்சிய நீர் நிலைகளையும் நாங்களே மனமுவந்து தருகிறோம். எடுத்து கொள்ளுங்கள்.

கெயில் குழாய்களும் எங்களுக்குத்தான் வேண்டும். எங்களுக்கு அவற்றை மிக பிடித்திருக்கிறது. நியூட்ரினோ ஆய்வகமும் இங்கேதான் இருக்க வேண்டும்.

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைதான் முக்கியம். போராட்டம் நடத்துங்கள். கண்டிப்பாய் உண்மை தெரிய வேண்டும். காவிரியொன்றும் எங்களுக்கு தேவை இல்லை. பேரறிவாளனும் தேவை இல்லை. எய்ம்ஸ்ஸும் வேண்டாம்.

இன்னும் நிறைய செய்யுங்கள். உங்கள் எண்ணம் புரிகிறது. அன்பு தெரிகிறது. நிறைய செய்யுங்கள்.

பொறுமையின் எல்லைக்கு எங்களை வேகமாக விரட்டுங்கள். இன்னும் வேகமாக. இன்னும் இன்னும் வேகமாக.

நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறோம்!

RAJASANGEETHAN