“உன் அலைபேசி எண்ணை அழிக்காமல் வைத்திருக்கிறேன்!” – இயக்குனர் அகத்தியன்

எப்படி அழிப்பது

உன் அலை பேசி எண்ணை. 

இனி என்ன செய்வது

அந்த எண்ணை வைத்துக்கொண்டு நான்.

அழைத்தால் யாராவது எடுப்பர்களா?

உன் பெயர் சொன்னால்

என்ன பதில் வரும்?

தவறுதலாய்

கை பட்டு வந்த அழைப்புகளில்

உரையாடிய தருணங்கள்

மறுபடியும் தவறுதலாய்

நிகழுமா?

அழிக்காமல் வைத்திருக்கிறேன்.

எப்படியும் ஒரு நாள்

இந்த அலைபேசி இறந்து போகும்.

அதுவரை உன் எண்

என்னிடம் உயிர் வாழட்டும்.

– அகத்தியன்

திரைப்பட இயக்குனர்

Read previous post:
0a6q
விஷால் வருத்தம் தெரிவிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு வாரம் கெடு!

சென்னையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடிகர் விஷால் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டு,

Close