விஷால் வருத்தம் தெரிவிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு வாரம் கெடு!

சென்னையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடிகர் விஷால் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டு, அவருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் வருமாறு:-

ஆனந்த விகடன் வார இதழில் விஷால், நமது தயாரிப்பாளர் சங்கத்தினை அவமரியாதை செய்யும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.

அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்குள் விஷால் தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ள ‘கத்திச்சண்டை’ திரைப்படம் தவிர்த்து அவர் நடிக்கும் எந்த படத்திறகும் தயாரிப்பாளர் சங்கமும், தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.