“வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் ‘காளி’ படத்தில் இருக்கிறது!” – நாயகி ஷில்பா மஞ்சுநாத்

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘காளி’ திரைப்படம், வருகிற (மே) 18ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது.

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, இசையமைக்க, விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்  சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் ‘காளி’ படத்தில் இடம்பெற்றுள்ள அரும்பே…” என்ற டூயட் பாடல், ஏற்கெனவே இணையதளத்தில் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்த பாடலில் நாயகன் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்டச் சொட்ட நெருக்கமாய் நடித்திருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களின் கனவுக் கன்னியாகி, தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

0a1c

இப்படத்தில் நடித்தது குறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறுகையில், “காளி’ படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ்த்திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை,  தமிழ்த் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் வகையிலான சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இந்த படத்தில்  வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் இருக்கிறது.

என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனோ, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவநாகரீக  சூழ்நிலையில் வளர்ந்த பெண். ஆனால், பார்வதி கதாபாத்திரமோ அதற்கு முற்றிலும் மாறான கிராமியச் சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்.

‘அரும்பே…’ பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, நான் எண்ணிக்கூட பார்த்திராத உயரத்தை எனக்குத் தந்துள்ளது. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு  மேலும் உச்சத்துக்கு கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்.

தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமைப்பட்டு உள்ளேன்” என்றார் ஷில்பா மஞ்சுநாத்.

 

Read previous post:
a7
தந்தை – மகன் அன்பை சொல்லும் படம் ‘ஆண்டனி’

இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஆண்டனி’. இந்த படத்தில் ‘சண்டக்கோழி’ புகழ் லால், நிஷாந்த், வைசாலி, ரேகா, சம்பத் ராம், 'வெப்பம்' ராஜா.சேரன்

Close