நான்கு நாயகிகளை காதலிக்கும் நாயகனாக விஜய் ஆண்டனி: ‘காளி’ சிறப்பு முன்னோட்டம்!

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, இசையமைத்துள்ள ‘காளி’ திரைப்படம் இன்று (மே 18) உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

ரஜினியின் வெற்றிப்படத் தலைப்புகளுக்கு தனி ஈர்ப்பு உண்டு. அந்த வகையில் விஜய் ஆண்டனியின் இந்த ‘காளி’, முதல் தோற்றம் (ஃபர்ஸ்ட் லுக்) வெளியான நாளிலிருந்தே தனி கவனம் பெற்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து டீஸர், ட்ரெய்லர், ‘அரும்பே’ பாடல், படத்தின் முதல் 7 நிமிட காட்சி என ஒவ்வொன்றாக வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

0a1c

டாக்டருக்கு படித்துவிட்டு, அமெரிக்காவில் மிகப் பெரிய மருத்துவமனையின் உரிமையாளராக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு விசித்திரமான கனவு வருகிறது. அக்கனவில் கொடிய பாம்பு, முரட்டுக்காளை, கதறி அலறும் ஒரு சிறுவன் தோன்றி மிரட்ட, அச்சமும், குழப்பமும் அடைகிறார் விஜய் ஆண்டனி. தனது வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் தான் இப்படி கனவாக வந்து தொல்லை கொடுக்கிறது என்ற முடிவுக்கு வரும் அவர், அந்த கனவுக்கான காரணத்தை கண்டறிய, தமிழ்நாட்டில் உள்ள தனது பூர்விக ஊருக்கு வருகிறார். இங்கு அவருக்கு ஏற்படும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தான் ‘காளி’ படத்தின் கதை.

k8

இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு நாயகிகள் நடித்துள்ளனர். ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் வரும் இந்த நான்கு பெண்களுடனும் விஜய் ஆண்டனி ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் படத்தில் உண்டு. ஆனால், இவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அல்ல, ஒருவர் பின் ஒருவராக வெவ்வேறு தருணங்களில் காதலிப்பதாக திரைக்கதை, இளைஞர்களுக்குப் பிடிக்கும் விதமாய் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளத்தை நெகிழ வைக்கும் அம்மா செண்டிமெட்டும் படத்தில் இருக்கிறது. இதற்கென தாயை போற்றும் ஓர் அற்புதப் பாடலும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

k12

“காதல், பாசம், மர்மம், திகில், சஸ்பென்ஸ் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த கலவையாக, ஃபேமிலி எண்டர்டெய்னராக ‘காளி’ உருவாகியிருக்கிறது. விஜய் ஆண்டனி படங்களிலேயே இது முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம். ஆகவே, இதில் விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பையும் ரசிகர்கள் கண்டு களிப்பார்கள். அனைத்துத் தர்ப்பு ரசிகர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்” என்கிறது படக்குழு.