அதிமுக தலைமை அலுவலகத்தில் அடிதடி: சசிகலா புஷ்பா கணவர் காயம்

அதிமுகவின் முன்னாள் உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் கணவர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தாக்கப்பட்டார்.

ஜெயலலிதா மரணம், சசிகலாவின் அரசியல் பிரவேசம், அதிமுகவை கைப்பற்றும் பாஜகவின் முயற்சி என பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு டிசம்பர் 29ம் (நாளை)  கூட உள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மனுவை சசிகலா புஷ்பா தரப்பில் கொடுப்பதற்காக அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனும் வக்கீலும் தலைமை அலுவலகத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கைகலப்பில் இறங்கியதில் லிங்கேஸ்வர திலகன் கடுமையாக தாக்கப்பட்டார். போலீசாரால் அவர் மீட்கப்பட்டு தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read previous post:
0a1a
Achamindri Movie Theme – Lyric Video

ACHAMINDRI is an upcoming Tamil Action Thriller film with a strong social message written and directed by P.Rajapandi and produced

Close