வைகோவை எதிர்க்கும் அதிமுக வேட்பாளரை மாற்றினார் ஜெயலலிதா!

அதிமுக வேட்பாளர் பட்டியல் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 8 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றி அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புதிய பட்டியலில் அமைச்சர்கள் 3 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ராமானுஜன் கணேஷ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கடம்பூர் ராஜூ நிறுத்தப்பட்டுள்ளார்.

மாற்றப்பட்டோர் விவரம்:

திருச்சி கிழக்கு : தமிழரசிக்கு பதில் வெல்லமண்டி நடராஜன்

அரக்கோணம் : கோ.சி.மணிவண்ணனுக்கு பதில் சு.ரவி

பாப்பிரெட்டிபட்டி : குப்புசாமிக்கு பதில் பி,பழனியப்பன்

ஈரோடு மேற்கு : வரதராஜனுக்கு பதில் கே.வி.ராமலிங்கம்

கோவில்பட்டி : ராமனுஜன் கணேஷ்க்கு பதில் கடம்பூர் ராஜூ

சங்கராபுரம் : ராஜசேகருக்கு பதில் ப.மோகன்

ஸ்ரீவைகுண்டம் : புவனேஸ்வரனுக்கு பதில் எஸ்.பி.சண்முகநாதன்

பாளையங்கோட்டை – எஸ்.கே.ஏ.ஹைதர் அலி

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஜெயலலிதா மாற்றம் செய்வது இது 7வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.