சதாம் பற்றிய பிரேமலதா பேச்சு ஏற்புடையதல்ல!” – விடுதலை சிறுத்தைகள்

வருகிற சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவரும் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் “சர்வாதிகாரி சதாம் உசேன் போல தான் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் முடிவு ஏற்படும்” என்று ஒரு கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியானது.

சதாம் உசேன் பற்றிய பிரேமலதாவின் இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக ஆட்சேபம் கிளம்பியிருக்கிறது.

இந்நிலையில், தேமுதிக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, “சதாம் உசேன் பற்றிய பிரேமலதா விஜயகாந்த் பேச்சு ஏற்புடையதல்ல” என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆளூர் ஷா நவாஸ் இது பற்றி கூறியிருப்பது:

“சதாம் உசேன் குறித்த பிரேமலதா அவர்களின் பேச்சு ஏற்புடையதல்ல. ஏகாதிபத்தியத்திடம் மண்டியிடாத மாவீரன் சதாம். மரணத்தை துணிந்து எதிர்கொண்ட அவரது வீரத்தை உலகமே வியந்து போற்றுகிறது. அத்தகைய வரலாற்று நாயகனின் இறுதிக்காலத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால் உயர்வாகப் பேச வேண்டுமே தவிர இழிவாகப் பேசக்கூடாது.”