குடிமக்களின் வியர்வையை, ரத்தத்தை அரசே உறிஞ்சி குடிக்கும் அவலம்!

வரி வரி என்று வெறிபிடித்து வழிப்பறி செய்து, குடிமக்களின் வியர்வையை, ரத்தத்தை அரசே உறிஞ்சிக் குடிக்கும் அவலம்…

10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். 4 லட்சத்துக்கு வரி கட்ட சொல்ற! சரி, கட்டிட்டேன். மீதி உள்ள 6 லட்சம் ரூபாய்க்கு வீடு அல்லது நிலம் வாங்கப் போறேன். அதுலேயும் பத்திரப் பதிவுன்னு 14% வாங்குற. நகை வாங்கப் போறேன். அங்கேயும் வரி. சாப்பிடப் போறேன். அங்கேயும் வரி. மக்களை சாகடிச்சிப் புடுங்குற.

கார் வாங்கும்போதே வாகன வரியும் – சாலை வரியும் (road tax) சேர்த்துப் புடுங்குற. அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கவரி வசூலிக்கிற. பெட்ரோல், டீசல் எரிபொருட்களுக்கு வரி. இதைத் தவிர கடைகளில் வாங்கும் அத்தனை பொருட்களுக்கும் வரி…

இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை வாரி கொடுத்தா –

நீ அதை அப்படியே தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்ப? கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவே?! பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிக்கும் பெரும் முதலாளிகளுக்கும் மானியம் ஒதுக்குவே. கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்பே.

லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே… அதை மீட்க என்ன நடவடிக்கை எடுத்த?

இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.

முதலில் சட்டத்தை மாற்று. எல்லா சிஸ்டத்தையும் மாற்று. சில மாதங்கள் கழித்தும் மீண்டும் அவன் பணத்தை டாலராக, தங்கமாக, சொத்தாக வாங்கத்தான் செய்வான்.

வரியை ஒழுங்காக பாமர மக்களும் விவசாயிகளும் பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்து, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் (அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்) அடிமை இந்தியமே…!

ANANDAN RAJAGOPAL