விஜய் டிவி புகழ் கார்த்திக்ராஜ் – நிரஞ்சனா நடிக்கும் த்ரில்லர் ‘465‘

எஸ்.எல். பிரபுவின் ‘எல்.பி.எஸ். பிலிம்ஸ்’ தயாரிக்கும் புதிய தமிழ் படம் ‘465’ (நாலு ஆறு அஞ்சு). விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’, ‘ஆபீஸ்’ ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்து, மக்களின் கவனத்தை ஈர்த்த கார்த்திக்ராஜ், இப்படத்தின் மூலம் பெரிய திரையில் அவருடைய முதலாவது பயணத்தை தொடங்குகிறார்.

எந்த இயக்குனரிடமும் உதவியாளராக பணியாற்றாமல், தன்னை ஒரு இயக்குனராக வளர்த்துக்கொண்ட சாய் சத்யம், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சுவாரஸ்யமான த்ரில்லர் கதையமைப்பு கொண்ட இப்படத்தில் நாயகியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காமெடி கதாபாத்திரங்களில் மனோபாலா, கிரேன் மனோகர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மஹேஸ்வரன், சுரேகா, ஷமீம் மோகன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘ராட்டிணம்’,  ‘கோ2’ படங்களில் பணியாற்றிய பிலிப் ஆர்.சுந்தர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்ற சஷாங்க் ரவிச்சந்திரன் மற்றும் ஜெஃப் பேட்டர்சன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். ‘பிச்சைக்காரன்; ‘சைத்தான்’ போன்ற படங்களில் பணியாற்றிய ஜி.ராஜராஜன் எடிட்டராகவும், கலரிஸ்ட்டாகவும் பணியாற்றுகிறார். மேக் ரியல் மீடியா பாலமுருகன் விஷுவல் எபெக்ட்ஸை கவனிக்கிறார்.

கதை – எஸ்.எல். பிரபு

வசனம் – ஸ்ரீராம் பத்மநாபன்

சவுண்ட் எபெக்ட்ஸ் – சதிஷ்

ஆடியோகிராபி – வில்வா

தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.சதிஷ் வேல்

புரொடக்சன் கண்ட்ரோலர்  – பி. அபிலாஷ்

ஊடகத்தொடர்பு – வின்சன் சி.எம்

Read previous post:
n7
465 Movie Press Meet Photos Gallery

Close