காதலும் கபடியும் கலந்த கிரைம் திரில்லர் ‘யார் இவன்’: செப்.15-ல் ரிலீஸ்!

எம்.ஜி.ஆர். நடித்த `படகோட்டி’, சிவாஜி கணேசன் நடித்த `உத்தம புத்திரன்’  உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் டி.பிரகாஷ் ராவ். இவரது பேரன் டி.சத்யா, `பீமிலி கபடி ஜட்டு’, `எஸ்.எம்.எஸ்’, `ஷங்கரா’ ஆகிய தெலுங்கு படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இவர் ‘யார் இவன்’ படத்தின் மூலமாக  தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் சச்சின் நாயகனாகவும், ஈஷா குப்தா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, சதீஷ், கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வருவதையொட்டி, படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் டி.சத்யா, “யார் இவன்’ காதலும், கபடியும், ஆக்ஷனும் கலந்த கிரைம் திரில்லர். கதையின் நாயகன் சச்சின் கபடி விளையாட்டு வீரர். பணக்கார நாயகி ஈஷா குப்தா கபடி ரசிகை. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் நடந்த இரண்டாவது நாளே நாயகி படுகொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்ததாக நாயகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இப்படி எதிர்பாராத திருப்பங்களுடன், விறுவிறுப்பான காட்சிகளுடன் நகரும் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் திருப்தி செய்யும். பணக்கார நாயகியின் அப்பாவாக பிரபுவும், கொலையை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக கிஷோரும் நடித்திருக்கிறார்கள்” என்றார்.

 ஒளிப்பதிவு – பினேந்திரா மேனன்

இசை – எஸ்.எஸ்.தமன்,

பாடல்கள் – நா.முத்துக்குமார்

 படத் தொகுப்பு – பிரவின் புடி

சண்டை பயிற்சி – கனல் கண்ணன்

நிர்வாக தயாரிப்பு – சிவபிரசாத் குடிமிட்லா

 தயாரிப்பு – ரெய்னா ஜோஷி

எழுத்து, இயக்கம் – டி.சத்யா

ஊடகத் தொடர்பு – நிகில்

 

 

 

Read previous post:
0a1d
அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள்!

தி.மு.கழகத்தின் செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள், இப்போது அரியலூருக்கு சென்று அனிதாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள போகிறீர்கள், நேரடியாக சென்று துயரத்தின் உச்சத்தில்

Close