பிள்ளையாரை போட்டுடைத்த பெரியார்: நீதிமன்றத்தில் சுவையான விவாதம்!

பெரியார் பிள்ளையாரை போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்…

நீதிபதி (கைது செய்த காவலரிடம்): இவர் என்ன குற்றம் செய்தார்?

காவலர்: இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்.

நீதிபதி (பெரியாரிடம்): பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா?

பெரியார்: ஆமாம், போட்டுடைத்தேன்.

நீதிபதி: ஏன் அப்படிச் செய்தீர்கள்?

பெரியார்: கடைவீதிக்குப் போனேன். அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன். யாருக்கும் இடையூறு இல்லாமல், தெரு ஓரமாகப் போட்டுடைத்தேன்.

நீதிபதி: ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதைப் புண்படுத்தாதா? அது தவறல்லவா?

பெரியார்: நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, பலர் அதேபோல வாங்கினார்கள். அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்.

நீதிபதி (காவலரிடம்): மற்றவர்கள் என்ன செய்தார்கள்?

காவலர்: அவர்களும் போட்டுடைத்தார்கள்.

நீதிபதி: அவர்களை ஏன் கைது செய்யவில்லை?

காவலர்: அவர்கள் “கடவுள் உண்டு” என்று சொல்லி உடைத்தார்கள். ஆனால் இவரோ, “கடவுள் இல்லவே இல்லை” என்று சொல்லி உடைத்தார்.

நீதிபதி: இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? “கடவுள் இல்லை” என்று சொல்பவர் உடைப்பதில் அர்த்தம் உண்டு. “கடவுள் உண்டு” என்று சொல்பவர், அவர்கள் வணங்கும் கடவுளையே உடைப்பது நியாயமா? (பெரியாரை பார்த்து) அய்யா, நீங்கள் போகலாம்.

பெரியார்  நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தார்!

தகவல்: Devaneyan Arasu

Read previous post:
k6
குற்றமே தண்டனை – விமர்சனம்

’குற்றமே தண்டனை’ படம் பார்த்தேன். எளிமையான, அதேநேரம் வலிமையான திரைப்படம். ஒரு எதார்த்த க்ரைம் திரில்லர். குறைவான கதாபாத்திரங்கள், வெகு இயல்பான நடிப்பு, இம்மி பிசகாமல் முடிவு

Close