ஆமாடா… நான் ஜோசப் விஜய் தான்; இயேசு காப்பாற்றுகிறார்: விஜய் நன்றி அறிக்கை!

‘மெர்சல்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஜய் இன்று (25ஆம் தேதி) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் லெட்டர் பேடில் இந்த நன்றி அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த லெட்டர் பேடில், ‘ஆமாடா, நான் ஜோசப் விஜய் தான்’ என்று எச்.ராஜா ஷர்மா வகையாறாக்களின் நெற்றிப்பொட்டில் அறைந்து உணர்த்தும் விதமாக, விஜய்யின் பெயர் ‘சி.ஜோசப் விஜய்’ என அச்சிடப்பட்டுள்ளது. மேலும், ‘ஆமாடா, நான் கிறிஸ்துவன் தான்’ என பசுமாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கிகளுக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்து உணர்த்தும் விதமாக, லெட்டர் பேடின் மேல்பகுதியில் ‘ஜீசஸ் சேவ்ஸ்’ (‘இயேசு காப்பாற்றுகிறார்’) என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.

“மதரீதியாக விமர்சித்து வம்பிழுக்கும் சங்கிகளுக்கு விஜய் பதில் சொல்லாமல் மௌனம் காக்கிறாரே…” என்று ஆதங்கப்பட்ட அவரது ரசிகர்களுக்கு, விஜய்யின் இந்த லெட்டர் பேட் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

விஜய்யின் அந்த லெட்டர் பேட் அறிக்கை:

0a1d

Read previous post:
0a1g
எனில், விஷால் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியவன் எவன்டா…?

'மெர்சல்' திரைப்படத்தை இணையத்தில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளரும், வட இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவருமான எச்.ராஜா ஷர்மா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம்

Close