விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி: படப்பிடிப்பு துவங்கியது!

ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று பூஜையுடன் துவங்கியது.

‘திங்க் பிக் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் 5வது படைப்பான இந்த திரைப்படத்தின் பூஜையில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு), இயக்குனர் மோகன் ராஜா, படத்தின் கதாநாயகி சாயீஷா சாய்கல் (அறிமுகம்), எடிட்டர் மோகன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் ஏ.எல்.அழகப்பன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தம்பி ராமையா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, மாநில விருது பெற்ற புரொடக்ஷன் டிசைனர் ஜெயஸ்ரீ மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’,  உள்ளத்தில் உள்ளதை மிக அழகாக திரையில் பிரதிபலிக்கும் திறமை படைத்த  இயக்குனர் விஜய், ரசிகர்களின் ரசனைகளை பூர்த்தி செய்வதற்காக எந்த மாதிரியான முயற்சியையும் எடுக்கும் ஜெயம் ரவி, எழில் மிகு காட்சிகளால் படத்திற்கு உயிர் கொடுக்கும்   ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு) என வலுவான கூட்டணியில் இப்படம் உருவாகுகிறது.

0a1i

Read previous post:
m3
“சமூக முரண்பாடுகளை பேசும் படங்களை மக்கள் வரவேற்கிறார்கள்!” – பா.ரஞ்சித்

“இப்போது பேய் படங்கள் ஒரு பக்கம் ஓடினாலும், ‘காக்கா முட்டை’, ‘ஜோக்கர்’ மாதிரியான சமூக முரண்பாடுகளை பேசும் படங்களும் மக்களை சென்று சேருகின்றன” என்று இயக்குனர் பா.ரஞ்சித்

Close