“இறைச்சி இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று!” – இயக்குநர் வெற்றிமாறன்

“அடிப்படை தேவைகளில் ஒன்றான இறைச்சி, இன்றைய சூழலில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது” என இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.

தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு தலைமுறையை தீர்மானிப்பது, அந்த தலைமுறை சிறுவயதில் சாப்பிடும் உணவு தான். என்னுடைய தலைமுறையாகட்டும், எனக்கு அடுத்த தலைமுறையாகட்டும் உணவால் நிறைய பிரச்சினைகள் வந்துள்ளன. உணவின் தரம், சமையலின் தரம் ஆகியவற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தி தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

மனிதனின் வளர்ச்சியில் இன்றியமையாதது இறைச்சி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இறைச்சி உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. ஆனால், இன்றைக்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது. நான் நிறைய இறைச்சி சாப்பிடுபவன். உணவகத்தின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்” என தெரிவித்தார்.