சமுத்திரகனி படத்தில் இருந்து விலகினார் வரலட்சுமி: தயாரிப்பாளர் மீது தாக்கு!

சமுத்திரகனி இயக்கும் மலையாளப் படத்திலிருந்து விலகியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், “ஆணாதிக்க சிந்தனை படைத்த, இங்கிதம் இல்லாத தயாரிப்பாளர்களுடன் என்னால் பணியாற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கி நடித்த ‘அப்பா’ திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டதால், இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபம் கிடைத்தது.

‘அப்பா’ வெளியீட்டின்போதே பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமுத்திரக்கனி தெரிவித்தார். முதலாவதாக ‘அப்பா’ மலையாள ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, படபூஜையில் கலந்துகொண்டார்.

0a1

தற்போது வரலட்சுமி திடீரென அப்படத்திலிருந்து விலகியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆணாதிக்க சிந்தனை படைத்த, இங்கிதம் இல்லாத தயாரிப்பாளர்களுடன் என்னால் பணியாற்ற முடியாது. நான் எடுத்திருக்கும் முடிவை ஆதரித்த சமுத்திரக்கனி, ஜெயராமுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் வரலெட்சுமி சரத்குமார்.

வரலெட்சுமி விலகலைத் தொடர்ந்து, அக்கதாபாத்திரத்தில் இனியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ஆகாச மிட்டாயே’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மலையாளத்தில் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார் சமுத்திரக்கனி.