தந்தி டிவி பட்டிமன்ற நிகழ்ச்சியில் அநாகரிகமாக நடந்து கொண்ட ரஜினி ரசிகர்கள்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் நேற்று (யூன் 17) மாலை தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று “திரு. ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது” என்று வாதிட்டேன். ரஜினி ரசிகர்கள் சிலரும், ஆர்யத்துவக் கூட்டத்தினர் பலரும் அடிப்பதற்கு மேடையை நோக்கிப் பாய்ந்தனர். மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்தனர். கூச்சலிட்டு பேச விடாமல் தடுத்தனர்.

இவர்கள் அரசியலுக்கு வந்தால், தமிழகம் என்னவாகும் என்பதை நடுநிலையாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். திரு. பாண்டே வருத்தம் தெரிவித்தார்.

திரு. நாஞ்சில் சம்பத் பேசும்போதும் மிக அநாகரிகமாக நடந்துகொண்டது இந்த பா.ஜ.க. B-டீம்.

ரஜினியின் ஆண்டவன் ஒரு வழியாகப் பேசி, இவர் அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு பெரும் அவலத்தை ச்ந்திக்கும் என்பது உறுதி.

# # #

நேற்று ரஜினி ரசிகர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், ஆர்யத்துவ கூட்டத்தினர் பலரும் மிக மிக அனாகரிகமாக, அசிங்கமாக நடந்துகொண்டனர். தந்தி டிவி நிர்வாகத்தினர் பலரும் வந்து வருத்தம் தெரிவித்தார்கள்.

நான் ஒரே ஒரு வேண்டுகோள் வைத்தேன். “எடிட் பண்ணும்போது, அந்தக் காட்சிளையும் சேர்த்துக் காட்ட வேண்டும். தமிழக மக்கள் கவனத்திற்கு இது கொண்டுவந்தாகப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.

முகநூல் வழியாக அந்த வேண்டுகோளை நண்பர் ரங்கராஜ் பாண்டே அவர்களிடமும், ஏனையத் தோழர்களிடமும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

# # #

தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பேசும்போது நடிகை திரு. கஸ்தூரி அவர்கள் ஒரு தகவல் சொன்னார். திரு. ரஜினிகாந்தை அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்ததாகவும், அரசியலுக்கு வருவேன் என்று அவர் சொன்னதாகவும் தெரிவித்தார்.

திரு. பாண்டே உடனே, “கஸ்தூரியிடம் சொல்கிற ரஜினி, தமிழ் மக்களிடம் சொல்ல வேண்டியதுதானே” என்று கேட்டார்.

தமிழர்களே, கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்குமுள்ள தொடர்பை அறுத்து எறியவில்லை என்றால் ஒரு பேரவலம் நம்மைப் பிடித்தாட்டும்.

# # #

முட்டாள்தனமாக ஒருவனை வணங்கும் ரசிகர் கூட்டமும், மூர்க்கத்தனமாக வெறியோடு இயங்கும் ஒரு பாசிசக் கூட்டமும் தமிழகத்தில் கைகோர்த்திருக்கின்றன. ரஜினி ரசிகர்கள் பா.ஜ.க.வின் பீ டீம் மட்டுமல்ல, அவர்களின் அடியாட்கள் என்பது அரங்குக்கு வந்த காவித் துண்டுகளையும், “பாரத் மாதா கி சை” முழக்கங்களையும் கேட்கும்போது புரிந்தது.

“நாங்கள் தனிக் கட்சி துவங்கப் போகிறோம்” என்று கத்தினர். “உங்களுக்கு பணம் தருவது பா.ஜ.க.” என்றேன். பேச்சு மூச்சில்லை.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அடித்து, அதிகார வரம் பெற்று அசத்தலாம் என்று கனவு காண்கிறது இந்தக் கூட்டம். சாராயக் கடைகளுக்கும், மணல் குவாரிகளுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பெண்கள் இதையும் எதிர்த்தாக வேண்டும்.

சுப.உதயகுமாரன்

ஒருங்கிணைப்பாளர், பச்சைத் தமிழகம்

46a

 

Read previous post:
0a1b
சானிட்டரி நாப்கினும் மோடியின் நாற்றமும்!

பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு பயன்படுத்தும் நாப்கின்களை ஆடம்பரப் பொருளாக வகைப்படுத்தி வரி விதிக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. அது குருதி கசியும் அந்த நாட்களில் நம் தேசத்தில்

Close