ஆளுநரிடம் ஜெயலலிதா கொடுத்த புதிய அமைச்சரவை பட்டியல்!

தமிழக ஆளுநர் ரோசய்யாவை ஆளுநர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சந்தித்தார். அப்போது அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் ஜெயலலிதா கொடுத்தார்.

அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமையைக் கோரினார். அவரிடம் 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினார்.

மேலும், அமைச்சரவைப் பட்டியலையும் ஆளுநரிடம் ஜெயலலிதா கொடுத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

23-ம் தேதி பகல் 12 மணிக்கு மேல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பார் எனத் தெரிகிறது. அப்போது ஜெயலலிதாவுடன், 28 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது.

அமைச்சரவை பட்டியல்

முதல்வர் ஜெயலலிதா – இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி, பொது நிர்வாகம், உள்துறை

ஓ.பன்னீர்செல்வம் – நிதித் துறை

திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை

எடப்பாடி பழனிச்சாமி – பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை

தங்கமணி – மின்சாரம், மதுவிலக்கு

உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

கோ.சி.வீரமணி – வணிக வரித் துறை

வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலாத் துறை

எஸ்.பி.வேலுமணி – உள்ளாட்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை

எஸ்.பி. சண்முகநாதன் – பால்வளத்துறை

கருப்பண்ணன் – சுற்றுச்சூழல் துறை

துரைக்கண்ணு – வேளாண் துறை

கடம்பூர் ராஜூ – தகவல் மற்றும் விளம்பரத் துறை

ஓ.எஸ்.மணியன் – ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை

ஆர்.பி.உதயகுமார் – வருவாய்த்துறை

டி.ஜெயக்குமார் – மீன்வளத் துறை

கே.டி.ராஜேந்திர பாலாஜி – ஊரகத் தொழில் துறை

சி.விஜயபாஸ்கர் – மக்கள் நலவாழ்வுத் துறை

சி.வி.சண்முகம் – சட்டம், நீதிமன்றம், சிறைச்சாலைகள் துறை

கே.பி.அன்பழகன் – உயர் கல்வித்துறை

பெஞ்சமின் – பள்ளிக் கல்வித் துறை

எஸ்.வளர்மதி – பிற்பட்டோர் நலத்துறை

ராஜலட்சுமி – ஆதி திராவிடர் நலத்துறை

எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்துத் துறை

ஆர். காம்ராஜ் – உணவு, இந்து சமய அறநிலையத் துறை

எம்.சி.சம்பத் – தொழில்துறை

டாக்டர் மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பத் துறை

செல்லூர் கே.ராஜூ – கூட்டுறவுத் துறை

டாக்டர் சரோஜா – சமூக நலத்துறை

12 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

தற்போது அமைச்சர்களாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், ஆர்.பி. உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி ஆகிய 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகிய 3 முன்னாள் அமைச்சர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

திண்டுக்கல் சி. சீனிவாசன், டாக்டர் வி.சரோஜா, கே.சி. கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, பி.பெஞ்சமின், வெல்லமண்டி என். நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, டாக்டர் எம்.மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 13 பேர் முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். அமைச்சரவையில் 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமுதாயத்தில் பெஞ்சமினுக்கு அமைச்சர் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.