ஊரக உள்ளாட்சி தேர்தல்: வெற்றி யாருக்கு?

தமிழகத்தில் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 5,090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நட்த்தப்பட்டது.

மேற்கண்ட ஒன்றிய / மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்குப் போட்டி – கட்சிவாரியாக எண்ணிக்கை வருமாறு:-

அதிமுக கூட்டணி

அதிமுக 3842/ 435

பாஜக 535/ 81

பாமக 432 /36

தேமுதிக 434/ 29

தமாகா 47/ 6

 

திமுக கூட்டணி

திமுக 4155/ 420

காங்கிரஸ் 421/ 74

சிபிஎம் 257 / 22

சிபிஐ 125/ 23

விசிக 106/ 24

மதிமுக 92/ 10

 

இதரவை

அமமுக 4710/ 498

நாம் தமிழர் கட்சி 1995/ 364

இத்தேர்தலில் சுமார் 77 சதவிகித வாக்குகள் பதிவாயின. இவற்றை எண்ணும் பணி நாளை (02-01-2020) காலை 8 மணிக்கு 315 மையங்களில் தொடங்குகிறது.

வாக்குச்சீட்டு அடிப்படையில் இந்தத் தேர்தல் நடந்ததாலும், 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டதாலும். வாக்குச்சீட்டுகளைப் பிரித்து, அடுக்கி, எண்ணி, முடிவை அறிவிக்க காலதாமதம் ஆகும் என தெரிகிறது.

மொத்த வாக்குகளும் எண்ணி முடிய, முழுமையாக முடிவு வர, நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் காலை வரை கூட ஆகலாம் என கூறப்படுகிறது. அதன்பிறகு தான் எந்த அணிக்கு வெற்றி என்பது துல்லியமாக தெரியவரும்.

 

Read previous post:
0a1b
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் ‘மாஸ்டர்’

விஜய்யின் 64-வது திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘மாஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த

Close