லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் ‘மாஸ்டர்’

விஜய்யின் 64-வது திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படத்திற்குமாஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0a1a

இந்த படத்தை ’மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் எழுதி  இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பினை பிலோமின் ராஜ்  கவனிக்கிறார்  .

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன்தாஸ், அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் .

’மாஸ்டர்’ படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய் போதை மயக்கத்தில் இருக்கும் ஒருவரின் பாய்ண்ட் ஆஃப் வியூவிலோ, அல்லது விஜய்யே போதை மயக்கத்தில் இருப்பது போன்றோ காட்சி தருகிறார். எனவே இது போதை பொருளை மையமாக்க் கொண்ட படம் என்பது தெளிவாகிறது.

இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.  .

வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார்,  பொன் பார்த்திபன்

லைன் புரொடியூசர்ஸ் –  லலித், ஜெகதீஷ்

நிர்வாக தயாரிப்பு – R .உதயகுமார்

சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா

விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா

ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங்

நடனம் – தினேஷ், சதிஷ்

மக்கள் தொடர்பு – ரியாஸ்.கே அஹ்மத்