சல்லிக்கட்டு: அவசர சட்டத்துக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மேனகா காந்தி மனு!

சல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழர்களின் கலாசாரத்தை மதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள நிலையில், அவரது அமைச்சரவை சகாவான மேனகா காந்தி, சல்லிக்கட்டுக்கு எதிராக நேரடியாக களமிறங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பாஜக-வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது.

அதேநேரம், இதுவரை உச்சநீதிமன்றத்தில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தங்களது கருத்துக்களை கேட்காமல் சல்லிக்கட்டு தொடர்பான உத்தரவை பிறப்பிக்க கூடாது என்பது இவர்கள் கோரிக்கை.

“கிராபிக்ஸில் ஜல்லிக்கட்டு விளையாடலாமே” என்றும், “சிங்கத்தை அவிழ்த்து விடுகிறோம்; அடக்குகிறீர்களா” என்றும் நக்கலடிக்கும் நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் அடுத்து என்ன செய்யும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்