பொசுங்கிப்போன போலிகள் – ஆதி, பாலாஜி, லாரன்ஸ்!

மகாபாரதம். குந்தி என்ற திருமணமாகாத அரச குடும்ப இளம்பெண் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். அந்த குழந்தையை யாரும் அறியாத வகையில் ஒரு பேழையில் தனது சேலையை மூடி ஆற்றில் விட்டுவிடுகிறாள்.

அந்த ஆண் குழந்தை ஒரு தேரோட்டியின் மகனாக வளர்கிறது. காலப்போக்கில் அங்கத நாட்டின் அரசனாக ஆட்சி செய்கிறான்.

தன்னை பெற்ற தாய் யார் என அறியும் ஆர்வம். இந்த கதையில் அந்த சேலை முக்கிய பங்கு வகிக்கும். பல பெண்மணிகள் அரசனின் தாயாக இருக்க ஆசைப்பட்டு வருவர். அந்த குழந்தையை இனி கர்ணன் என்றே அழைப்போம்.

கர்ணன், தன் தாய் என வருவோரை அந்த சேலையை உடுத்தப் பணிப்பான். இந்தக் கால conditions apply போல, அந்த பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை தருவான்.

“தாயே, இந்த சேலையை எனது உண்மையான தாய் மட்டுமே அணிய் இயலும். போலியான பெண், தாய் என்று நடித்து அணிந்தால் சேலை இருக்கும்; பெண்மணி எரிந்து சாம்பலாகிவிடுவார்” என்பான்.

சிலர் அணியவே அஞ்சி ஓடினர். போலியான சிலர் அணிந்து சாம்பலானார்கள்.

அதைப்போல, போலி சமூக ஆர்வலர்களை மாணவர் இயக்கம் பொசுக்கி வருகிறது.

ஆதி, பாலாஜி, லாரன்ஸ், இன்னும் பலர்.

ஆயிரம் போலிகள் வந்தாலும் இதே கதைதான்.

Do not steal the limelight. Be the beacon light .

Anyone listening?

KANNIYAPPAN ELANGOVAN

 

Read previous post:
0a1c
சல்லிக்கட்டு: அவசர சட்டத்துக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மேனகா காந்தி மனு!

சல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Close