போலீஸ் அராஜகத்தை மீறி மெரினாவை மீண்டும் கைப்பற்றிய மாணவர்கள்!

சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இன்று காலையில் குண்டுக்கட்டாக தூக்கியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தது போலீஸ்.

ஆனால், சிதறி ஓடிய மாணவர்கள், போலீசாரின் அராஜகத்தையும் மீறி மீண்டும் திரும்பி வந்து, பெரும் கூட்டமாக திரண்டு வருகின்றனர். இதனால் மெரினா கடற்கரையை மீண்டும் இளைஞர்கள் கூட்டம் ஆக்கிரமித்து விட்டது. போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

முன்பு காமராஜர் சாலையையொட்டி நிறைந்திருந்த இளைஞர் படை தற்போது கடலுக்கு வெகு அருகில் நிலை கொண்டுள்ளது.

 அடுத்த நடவடிக்கை குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.