மருத்துவ படிப்பில் 85% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசு கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் உள்ள இடங்களில் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கப்படும்’ என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபி.எஸ்.இ மாணவர்கள் தரப்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவ படிப்பில்  85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாணை ரத்தை எதிர்த்து சுகாதாரத்துறை மேல் முறையீடு செய்யும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மருத்துவ மாணவர்கள் 85 சதவீத இட ஒதுக்கீடு ரத்தால் மாணவர் சேர்க்கை மேலும் காலதாமதாகும் என தெரிகிறது.

Read previous post:
0
பாடம் புகட்டுவோம்: உங்களுக்கு இந்தி தெரிந்தாலும் இனி தமிழகத்துக்குள் அம்மொழியில் பேசாதீர்கள்!

லண்டனில் நடந்த ஏ.ஆர்.ரெஹ்மானின் கச்சேரியும் அதன்பின்பான வட இந்தியர்களின் புறக்கணிப்பும், எதிர்வினையும் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தரும் அருமையான ‘case study’. அந்த நிகழ்ச்சியின் பெயர், ‘நேற்று

Close