ஜெயலலிதா – சசிகலாவை தாக்கி கார்ட்டூன் வெளியிட்டது தமிழக பா.ஜ.க.!

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டு சேரக் கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது தமிழக பா.ஜ.க.

தமிழக பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலா ஆட்டுவிப்பதைப் போலவும், ஜெயலலிதா ஆடுவதைப் போலவும், அதை பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப் போலவும் படம் வரையப்பட்டுள்ளது. அருகில் “சின்னக்கா இயக்கத்தில் பெரியக்கா நடிப்பில் தேர்தல் நாடகம் இனிதே ஆரம்பம்” என்ற நக்கல் வாசகம் இடம் பெற்றுள்ளது.

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு இனி வாய்ப்பில்லை என்பது ஒருபுறம் இருக்க, எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு போடும் ஜெயலலிதா இந்த கார்ட்டூனுக்கு எதிராக தமிழக பா.ஜ.க மீது அவதூறு வழக்கு தொடுப்பாரா? அல்லது உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு இருப்பதால் கண்டுகொள்ளாதது போல் பம்முவாரா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

0a1j