வியர்த்துக்கொட்டிய உதவியாளருக்கு விசிறிவிட்ட விஜயகாந்த் – வீடியோ

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேமுதிக பிரச்சார பொதுக் கூட்டத்தில், தமது உதவியாளருக்கு வியர்த்துக் கொட்டியதால், மேடையிலேயே அவருக்கு விஜயகாந்த் விசிறி விட்டார்.

இதனைக் கண்டு மேடையில் இருந்தவர்கள் அனைவரும் புன்சிரிப்புடன் காணப்பட்டனர். தொண்டர்கள் அனைவரும் உற்சாக ஒலி எழுப்பினர்.

“விஜயகாந்த் தனது உதவியாளரை அடித்தார்” என நிமிடத்திற்கு நூறுமுறை ஆன்லைனிலேயே எடிட்டிங் செய்து வெளியிட்ட ஊடக தர்மவான்களே…! இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாதா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மொகைதீன் அப்துல் காதர் என்ற முகநூல் பதிவர்!

உதவியாளருக்கு விசிறிவிடும் விஜயகாந்த் வீடியோ:

https://youtu.be/rVucvL7ACHg