நாயக நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் நாயக நடிகர்: புலம்பும் தயாரிப்பாளர்!

இயக்குனர் பாலாவின் உதவியாளர் நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் ’மயூரன்’. வரும் (ஆகஸ்ட்) 2ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இதனால் படத்தின் புரமோஷனுக்கு வருமாறு நாயக நடிகர், நாயக நடிகை ஆகிய இருவரையும் தயாரிப்பாளர் தரப்பு அழைத்திருக்கிறது

”நாயக நடிகர் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன்” என்று நாயக நடிகையின் அம்மா தடை போடுகிறாராம். ”என் மகள் கோடீஸ்வரி என்பதால், என் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் புரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள்” என்கிறாராம் அவர்.

m2

“நாயக நடிகை வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வர வேண்டும்?” என்று நாயக நடிகர் கேள்வி எழுப்புகிறாராம்.

இருவரும் வராமல் பட்த்தை எப்படி புரமோஷன் செய்வது என்று தயாரிப்பாளர் தரப்பு தவிக்கிறதாம். “படத்திற்கு விளம்பரம் அமைவதே கடினம். அப்படியிருக்க, கதாநாயகன் – கதாநாயகி ஆகிய இருவரும் இப்படிச் செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும்?” என்று புலம்புகிறதாம் தயாரிப்பாளர் தரப்பு.

Read previous post:
0a1d
Sivakarthikeyan’s ‘Hero’ release date announced

Having been listed as one of the most promisingly expected flicks of 2019, Sivakarthikeyan’s Hero has nailed it perfectly when

Close