வசூலில் சாதனை படைத்து வருகிறது ‘திருநாள்’

‘ஈ’ வெற்றிப்படத்தில் இணைந்து நடித்த ஜீவாவும், நயன்தாராவும் நீண்ட இடைவெளிக்குப்பின் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ‘திருநாள்’. கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார்

தயாரிப்பில், பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவாகி, கடந்த 5ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக உற்சாகத்துடன் கூறுகிறது படக்குழு.

“திரைப்பட ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, மாபெரும் வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ளது ‘திருநாள்’.  வெளியிட்ட நாளில் இருந்து நல்ல வசூல் சாதனையும் நிகழ்த்தியுள்ளது.

“ஸ்ரீகாந்த்தேவா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆகியுள்ளன.  ‘ஒரே ஒரு வானம்…’ என்ற பாடல், சக்தி ஸ்ரீகோபாலன், மகாலக்ஷ்மி ஐயர் ஆகியோரின் குரல்களில் கேட்போரை உருக வைத்துள்ளது. ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்துக்குப்பின் ஜானகியம்மாள் பாடிய ‘தந்தையும் யாரோ…’ பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது  ‘பழைய சோறு பச்ச மிளகா…’ பாடல் சமீபத்தில் இளைஞர்களின் ரிங் டோனில் இணைந்துள்ளது. மேலும் ‘சின்ன பங்காளி…’ பாடல்காட்சி வரும்போது தியேட்டரில் குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் குதூகலிக்கிறார்கள்.

“நயன்தாராவிற்கு தொடரும் வெற்றி மகுட வரிசையில், ‘திருநாள்’ படமும் இணைந்துள்ளது. ஜீவா நடித்த படங்களிலேயே இது மிகப் பெரிய வசூலை அள்ளியிருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ;திருநாள்’ உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது” என்கிறது படக்குழு.