ராமின் ‘தரமணி’ இசை வெளியீடு நவ.20; திரைப்பட வெளியீடு டிச.23

ஐடி நிறுவனங்களின் சொர்க்கம் என கருதப்படுவது சென்னை தரமணி. ஆனால், இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும் தரமணிக்கு இருக்கிறது. அந்த மற்றொரு பக்கத்தை மையமாகக்கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘தரமணி’.

ராம் இயக்கத்தில், ஜேஎஸ்கே பிலிம்  கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகம் வசந்த் ரவி, ஆண்ட்ரியா ஜெர்மியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனர் குமார் கங்கப்பன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் வீணா சங்கரநாராயணன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர்.

பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த ‘தரமணி’ படத்தின் டீஸர் சில மாதங்களுக்குமுன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

அடுத்து, இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நவம்பர் 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது. படம் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீசாகிறது.

Read previous post:
0a
“ஆபாச படம் என்றால் நதியா நடிக்க முன்வந்திருப்பாரா?”: கொந்தளிக்கிறார் இயக்குனர்!

தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் படம் ‘திரைக்கு வராத கதை’. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே

Close