தமிழகம் விரைவில் லெமூரியா கண்டம் போல அழிந்து போகும்!

தமிழக பீஜேபி தலைவர்களில் எனக்குந் தெரிந்த ஒரே ஒரு நேர்மையான மனிதர் திருவாளர் இல.கணேசன் மட்டுமே.

அவர் தான் ஒளிவு மறைவு இல்லாமல், “தேசத்தின் நலனுக்காக தமிழகத்தை பலி கொடுத்துத் தான் தீர வேண்டும்”என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்ட மூத்த பீஜேபி லீடர்…

அவர் சொன்னபடி தான நடக்கிறது்..

தமிழகத்தைப் கொடிய பாலைவனமாக்கும் திட்டங்களை அமுல்படுத்தும் பரிசோதனைக் கூடமாகவும், தமிழர்களை சோதனைக்குப் பயன்படுத்தும் கினி பன்றிகளாகவும் நடத்தும் திட்டத்தை மோடி அரசு எப்போதோ அமல்படுத்தத் துவங்கி விட்டது.

தமிழ்நாட்டை தமிழனும் ஆள முடியாது..வேறு மாநிலத்தவர்களும் ஆள முடியாது..

ஏனெனில், தமிழகம் விரைவில் லெமூரிய கண்டம் போல அழிந்து நாசகரமான அணுக்கழிவுகளாலும், நியூட்ரினோ துகள்களாலும், ஸ்டெரலைட் புகையினாலும் சூழப்பட்ட வாழத் தகுதியில்லாத பிரதேசமாகப் போகிறது…

இல.கணேசன் இதை அன்றே “ஒரு நாடு வாழ ஒரு மாநிலத்தைத் தியாகம் செய்யலாம்”என்றார். நாம் தான் அதன் உள் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளவில்லை..

மூட்டை முடிச்சுகளைக் கட்டத் துவங்குங்கள்.. நாம் குடியேற எந்த நாடு அனுமதிக்குமோ அந்த நாட்டில் அகதிக்கான ஐநா அங்கீகாரத்தைப் பெற அங்கே போன பின் போராடிக் கொள்ளலாம்

மற்றவர்களுக்கு வேண்டுமானால் த.ராமன் என்பவர் அவதார புருஷனாக இருக்கலாம். நமக்கு நம்மை முன் கூட்டியே எச்சரிக்கை செய்த இல.கணேசன் தான் அவதார புருஷன்.

மீத்தேன் கிணறுகள் தீ ஜீவாலையை கக்குகின்றன. விளைநிலங்களில் பெட்ரோல் படர்ந்து பரவி நிற்கிறது. குடி தண்ணீரும் வானும் மாசுபட்டுப் போய் விட்டன. கல்பாக்கம் அணுஉலை கசியத் தொடங்கி இருக்கிறது. ஸ்டெரலைட் வீசும் காற்றில் விசம் பரப்புகிறது. கருவில் உள்ள சிசுக்கள் உருவமில்லாத சதைப்பிண்டங்களாக இருக்கின்றன. எந்த திசையில் இருந்து வந்து புற்றுநோய் பிடிக்கும் என்பது தெரியாமல் புற்றோடு தூத்துக்குடி மக்கள் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். கடவுளின் துகளைப் பரிசோதிக்கும் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் ஆறுகளையும் மலைகளையும் வாழத் தகாத பொட்டல் வெளியாக்கிடும் பணியைத் தொடங்க பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டது..சாகர்மாலா தான் ஒட்டகத்தின் முதுகு தாங்கக் கூடிய கடைசி தர்ப்பைப் புல்லாக இருக்கும்..

மனிதர்கள் இல்லாத அமானுஷ்ய நாடாக (Ghost country) மாறப்போகும் தமிழ்நாடு மனிதனைக் கொல்லும் குப்பை மேடாக உலகப்படத்தில் காட்டப்படப் போகிறது..

தமிழ்நாட்டை தியாகம் செய்து விட்டதால் மூளியாகிப் போன பாரத மாதாவிற்கு அவர்கள் புதிய தேசியகீதம் எழுதிக் கொள்வார்கள்.

அறுபடை வீட்டிற்கும், அய்யப்பன் கோயிலுக்கும் நடையாய் நடந்து பழகிய கால்கள், ஒரு நாடோடிப் பாடலை உதட்டில் முணுமுணுத்தபடியே புதிய வாழ்விடத்தைத் தேடி நெடும் பயணம் போக வேண்டிய தருணம் நெருங்கி நெருங்கி வருவதை தயை கூர்ந்து உணருங்கள்..

தாய்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால் போராட்டம் தவிர வேறு வழியில்லை. போராடத் தவறினால் ஒடுங்கிய தகரத் தட்டை நீட்டி பிச்சை கேட்டபடி ஏழு கண்டங்களையும் அலசிப் பார்த்துக்கொண்டு பாதயாத்திரை போக வேண்டி இருக்கும்..

GNANABHARATHI CHINNASAMY