விஜய் சேதுபதியின் ‘கவண்’ அரசியல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படம்!

‘கோ’, ‘அயன்’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘கவண்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

கவண் என்பது தூய தமிழ்ச் சொல். ஆதிமனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி கவண்’ என்று கருதப்படுகிறது. இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன. விசைவில்பொறி (catapult), கல்லெறிகருவி (sling) என்று இலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழங்குதமிழிலும் அழைக்கப்படுகிறது கவண்.

0a1

படத்துக்கு வித்தியாசமான தலைப்பு வைப்பவர் என பெயர் பெற்றுள்ள கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த ‘கவண்’ படத்தில் நாயகியாக ‘ப்ரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் நடிக்கிறார்.

அரசியல் கலந்த பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 18வது படமாக வளர்ந்து வரும் இப்படத்துக்கு. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையில் ‘கவண்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.