தமிழின எதிரிகளின் நயவஞ்சக கூடாரமாய் மாறிவிட்ட ‘தினத்தந்தி’ நிறுவனம்!

தினத்தந்தியின் ஆங்கிலப் பதிப்பான DT Next நாளிதழில் காவிரி சிக்கல் குறித்து மலையாளியான பிரதீப் தாமோதரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே டெக்கான் குரோனிகல் நாளிதழில் பணியாற்றி அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அவர் எழுதிய கட்டுரையை தமிழர்களின் நீண்டகால எதிரிகளான இந்து மற்றும் டைம்ஸ் ஒப் இந்தியா நாளிதழ்கூட எழுதாது. அந்த அளவிற்கு கீழ்த்தரமான கட்டுரை இது.

இக்கட்டுரையில் காவிரிச் சிக்கலுக்கு தீர்வு தருகிறேன் என்று கூறி கட்டுரையாளர் தமிழக விவசாயத்தையும், உழவர்களையும் கொச்சைப்படுத்தியுள்ளார். ‘மனித நாகரீகம் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் காலத்தில் விவசாயம் தேவையற்றது’ என்பது போல ஒரு கருத்தை முன்வைத்து உள்ளார். ‘விவசாயிகளின் பங்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடும்படி இல்லை’ எனவும், ‘அதனால் விவசாயிகள் வேறு தொழில்கள் பார்க்க சென்றுவிடலாம்’ என்றும் கூறுகிறார் இக்கட்டுரையாளர்.

‘காவிரிக்காக போராட வேண்டிய அவசியம் இல்லை’ எனவும், ‘விவசாயம் இருப்பதால் தான் இங்கே போராட்டமெல்லாம்; விவசாயமே இல்லையென்றால் ஏன் மக்கள் போராடப் போகிறார்கள்? மேலும் வரும் காலத்தில் விவசாயிகள் குறைந்து விட்டால் காவிரிக்கான போராட்டம் நீர்த்துப் போய்விடும்’ என்றும், ‘அதனால் அரசியல்வாதிகள்கூட வாக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு போராட மாட்டார்கள்’ என்றும் அற்புதமான கருத்தை கூறியுள்ளார் இந்த மலையாளியான பிரதீப்.

இது எவ்வளவு பெரிய நயவஞ்சக கருத்து!

தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிக அளவு மழை பெய்கிறதாம். அது விவசாயத்திற்கு போதுமாம். கர்நாடகாவில் அப்படி இல்லையாம். அவர்கள் குடிக்கும் தண்ணீருக்கே போராடுகிறார்களாம். இப்படியான கருத்தை தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இவர்கள் எழுதுகிறார்கள் என்றால், இவர்களுக்கு இடம் கொடுத்த தமிழர் நிறுவனத்தை தான் முதலில் கண்டிக்க வேண்டும்.

தினத்தந்தி நிறுவனம் மலையாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், இன எதிரிகள் தமிழர்களுக்கு எதிராக கட்டுரை எழுதும்போது, தினத்தந்தியின் தலைவர், தமிழர் என்ற முறையில் எப்படி அனுமதிக்கலாம் என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ் மொழி இன உணர்வாளர்கள் தினத்தந்தி குழுமத்திடம் நேரடியாக பேசி இதற்கொரு முடிவு கட்ட வேண்டும் .

இல்லையென்றால், வரும் காலத்தில் இந்த வஞ்சகக் கூட்டம் தமிழர்களின் பணத்தை பெற்றுக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான பல கருத்துகளை தொடர்ந்து தமிழகத்தில் முன்வைத்து தமிழர்களின் ஒற்றுமையை அழிப்பார்கள்.

இராச்குமார் பழனிசாமி 
தமிழர் பண்பாட்டு நடுவம்.