சேட்டைக்கார பையன் – குறும்புக்கார பெண் பற்றிய படம் ‘ரங்கராட்டினம்’

காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராமசாமி தயாரித்திருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் மகேந்திரன் நாயகனாகவும், ஷில்பா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை ‘திட்டக்குடி’ படத்தை இயக்கிய சுந்தரன் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், “ராட்டினம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சந்தோஷப்படுத்தும் ஒரு விளையாட்டு சாதனம். ரங்கராட்டினம் என்பது அதிகப்படியான சந்தோஷத்தை கொடுப்பதாகும். ஒரு சேட்டைக்கார பையன், பயங்கர குறும்புக்காரன். அவன் அடக்கமும், அமைதியும்கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்து ஒருதலையாக காதலிக்க ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த பெண் இவனைவிட பயங்கர சேட்டை மற்றும் குறும்புக்காரப் பெண் என்று தெரிந்தவுடன் அவளை விட்டு விலக நினைக்கிறான். ஆனால், அவளோ அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 67 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் 4 பாடல்கள். இதில் நா.முத்துக்குமார் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் காமெடி வேடத்தில் மட்டுமில்லாமல், முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். யதார்த்தமான கதையாக ‘ரங்கராட்டினம்’ படத்தை இயக்கி இருக்கிறேன். படத்தின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி, படம் பார்ப்பவர்களுக்கு அதிக சந்தோஷத்தை இப்படம் கொடுக்கும்” என்றார்.

இசை – செல்வநம்பி

ஒளிப்பதிவு – ராசாமதி

படத்தொகுப்பு – விஷால்.வி.எஸ்.

பாடல்கள் – நா.முத்துக்குமார், யுகபாரதி, ஏகாதசி

நடனம் – தினேஷ்

நிர்வாகத் தயாரிப்பு – பெருமாள் காசி

Read previous post:
0a1a
நடன கலைஞர் சாண்டி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பலசாலி’

திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனக் கலைஞராகவும், நடன இயக்குனராகவும் புகழ் பெற்றவர் சாண்டி. இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பலசாலி’. இப்படத்தில் சாண்டிக்கு ஜோடியாக, ‘சண்டிக்குதிரை’ பட

Close