விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிக்கும் ’தமிழரசன்’: படப்பிடிப்பு நிறைவு

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழரசன்’ படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.

வரும் 29 ஆம் தேதி மாலை 5 மணியளவில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக  நடைபெற உள்ளது.

படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.