விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’: படப்பிடிப்பை துவக்கி வைத்தார் இளையராஜா

t2எஸ்என்எஸ் மூவிஸ் கௌசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (18-01-2019) துவங்கியது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் துவங்கிய இப்படப்பிடிப்பை இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்தார். விஜய் ஆண்டனியும், மாஸ்டர் பிரணவ் மோகனும் இணைந்து நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

இவ்விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் மிலன், தயாரிப்பாளர் கெளசல்யா ராணி, இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜி.சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எடிட்டர் மோகனின் பேரனும், இயக்குனர் மோகன் ராஜாவின் மகனும், நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மகனுமான மாஸ்டர் பிரணவ் மோகன் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஏற்கெனவே ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.